சந்திராஷ்டமம் தினம் நிறைய மனிதர் களை சற்று அச்சம் கொள்ளச் செய்கிறது. சில தவறுகள் நடக் கும்போது, அட இன்று எனக்கு சந்திராஷ்டமம். அதனால்தான் இவ் விதம் நடக்கிறது என்கிறார்கள். மேலும் சிலர், இன்னைக்கு இந்த வேலை வேண்டாம். இன்று சந்திராஷ்டமம். இன்னொரு நாள் பார்த்துக்கொள்ள லாம் என சில விஷயங்களைத் தள்ளி போடுகிறார்கள்.
ஒரு ராசிக்கு, 8-ஆமிடத்தில் சந்திரன் செல்லும்போது, அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்கிறது என்கிறார்கள்.
ஒரு நட்சத்திரத்திற்கு, 17-ஆம் நட்சத் திரத்தில் சந்திரன் செல்லும் போது, அந்த நட்சத்திரத் திற்கு சந்திராஷ் டமம் என்பர் எனில், அதற்கென்று ஒரு காரணம் இருக் கும்தானே! அதன் உண்மை என்ன!
அஸ்வினி என்பது கேது சார நட்சத்திரம். இதன் 17-ஆம் நட்சத்திரம் அனுஷம். இதன் சார நாதர் சனி. எனவே இங்கு இரு பாபர் சம்பந்தம் ஏற்படுவதால், இது சந்திராஷ்ட நட்சத்திரம் எனப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்த் தோமானால் ஒவ்வொரு நட்சத்திரத் தின் 17-ஆம் நட்சத்தி ரம் பகை அல்லது நீசம் அல்லது பாம்பு நட்சத்திரமாக அமைகிறது.
1. அஸ்வினி, மகம், மூலம் மூன்றும்- கேது சார நட்சத்திரங்கள். இதன் 17-ஆம் நட்சத்திரம் முறையே அனுஷம், உத்திரட் டாதி, பூசம் என்று வருகிறது. இந்த மூன்றும் சனி சார நட்சத்திரங்கள். ஆக, கேது சார நட்சத்திரத்திற்கு 17-ல் சனி சார நட்சத்திரத்தில் சந்திரன் செல்லும்போது, அங்கு கண்டிப்பாக மனக் குழப்பம் ஏற்படும்.
2. பரணி, பூரம், பூராடம் இவை மூன்றும் சுக்கிர சார நட்சத்திரம். இவற்றின் 17-ஆம் நட்சத்திரம் முறையே கேட்டை, ரேவதி, ஆயில்யம். இந்த மூன்றும் புதன் சார நட்சத்திரம். சுக்கிரன் உச்சமாகும் வீட்டில், புதன் நீசமடைவார். புதன் உச்சமாகும் வீட்டில், சுக்கிரன் நீசமடைவார். இதனால்தான், இந்த நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் ஆகின்றார் கள் போலும்.
3. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவை மூன்றும் சூரிய சார நட்சத்திரங்கள். இவற்றின் 17-ஆம் நட்சத்திரம் முறையே மூலம், அஸ்வினி, மகம் ஆகும். இந்த மூன்றும் கேது சார நட்சத்திரங்கள். இங்கு சூரியன்- கேது சம்பந்தம் ஏற்படுவதால் ஒரு கிரகண நிலை உண்டாகி புத்தி தடுமாற்றம் உண்டாகிறது. எனவே சந்திராஷ்டமம் நாள் என்றாகிறது.
4. ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த மூன்றும் சந்திர சார நட்சத்திரம். இதன் 17-ஆம் நட்சத்திரம் முறையே பூராடம், பரணி, பூரம். இவை சுக்கிர சார நட்சத்திரம். சந்திரன்+சுக்கிரன் பகை கிரகங்கள்.
எனவே இந்நாட்கள் சந்திராஷ்டமம் எனப்படுகிறது.
5. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இவை மூன்றும் செவ்வாய் சார நட்சத்திரம். இதன் 17-ஆம் நட்சத்திரங்கள் முறையே உத்திராடம், கார்த்திகை, உத்திரம். இவை முறையே சூரிய சார நட்சத்திரம். செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டும் நெருப்பு கிரகம் கூடவே பகை கிரகம். எனவே ஜாதகருக்கு கோபம் அதிகம் ஏற்படும் என்பதால், இதனை சந்திராஷ்டம தினம் என்று குறிப்பிட்டார்கள்.
6. திருவாதிரை, சுவாதி, சதயம் இவை மூன்றும் ராகு சார நட்சத்திரம். இவர்களின் 17-ஆம் நட்சத்திரங்கள் முறையே திருவோணம், ரோகிணி, அஸ்தம் ஆகும். இவை சந்திர சார நட்சத்திரம். எனவே இங்கு கிரகண சம்பந்தம் உண்டாகிவிடும். எனவே இது சந்திராஷ்டம நாளில் சேர்க்கப்பட்டுவிட்டது.
7. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை முறையே குரு சார நட்சத்திரம். இதன் 17-ஆம் நட்சத்திரம் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை. இவை மூன்றும் செவ்வாய் சார நட்சத்திரம். குரு உச்சமாகும் வீட்டில் செவ்வாய் நீசமடைவார். செவ்வாய் உச்சமாகும் ராசியில் குரு நீசமடைவார். சுத்தமாக எதிர்மறை தன்மையுடன் இருப்பதால் இது சந்திராஷ்டம நாட்கள் எனக் கூறப்பட்டது.
8. பூசம், அனுஷம், உத்திரட்டாதி இவை மூன்றும் சனி சார நட்சத்திரம். இவர்களின் 17-ஆம் நட்சத்திரம் முறையே சதயம், திருவாதிரை, சுவாதி. இவை மூன்றும் ராகு சார நட்சத்திரங்கள். சனி, ராகு இரண்டுமே மிக கொடிய கிரகங்கள். எனவே இதன் சம்பந்தம் ஏற்படும் நாளை சந்திராஷ்டம நாள் எனக் குறிப்பிட்டு சில விஷயங்களை த் தவிர்க்க கூறுகிறது.
9. ஆயில்யம், கேட்டை, ரேவதி இவை மூன்றும் புதன் சார நட்சத்திரம். இவற்றின் 17-ஆம் நட்சத்திரம் முறையே பூரட்டாதி, புனர்பூசம், விசாகம் ஆகும். இவை குரு சார நட்சத்திரங்கள். இந்த குருவின் மீன ராசியில் புதன் நீசமடைவார். மேலும் குரு+புதன் இருவருக்கும் புராணரீதியான பகை உண்டு. அதனால் இந்த சம்பந்தம். மன சஞ்சலத்தைத் தரும். எனவே இது சந்திராஷ்டம நாள் என விலக்கி வைக்கச் சொல்கிறது.
ஆக, சந்திராஷ்டம நாள் என்பது உண்மையாகவே மனம் பேதலித்து குழப்பமடையும். எனவே அதனை தவிர்த்துவிடுங்கள் என கூறுவதில், கோட்சார ரீதியாக உண்மை உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/28/andal-2026-01-28-16-43-32.jpg)